ஆஸ்திரேலியாவில் டாய்லெட் பேப்பர் வாங்கும் இடத்தில் ஏற்பட்ட மோதலில் ஒரு பெண் கத்தியை உருவிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆஸ்திரேலியாவின் சிட்னியில் அமைந்துள்ள சூப்பர் மார்க்கெட்டில் வாடிக்கையாளர்களுக்குள் மோதல் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு தொற்றியது. அப்போது அங்கு சென்ற காவலர்கள் விசாரிக்கையில் சூப்பர் மார்க்கெட்டில் இருந்து டாய்லெட் பேப்பரை வாங்குவதில் ஆணுக்கும் , பெண்ணுக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக முற்றி ஒருகட்டத்தில் ஒருவர் தான் வைத்திருந்த கத்தியை உதவியதாக அங்கு பணியில் இருந்த ஊழியர் ஒருவர் தெரிவித்தார்.
மேலும் கத்தியை உருவியது ஆணா ? பெண்ணா என்று தெரியவில்லை. இது குறித்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதற்கு யார் மீது தவறு என்று யோசிப்பதற்கு முன்பு கொரோனா வைரஸின் அச்சத்தால் , நாட்டில் ஏற்பட்டுள்ள பயத்தால் தான் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்பட்டுள்ள பயத்தின் காரணமாக டாய்லெட் பேப்பர் பற்றாக்குறையால் மக்கள் டாய்லெட் பேப்பரை வாங்க போட்டி போட்டு முண்டியடித்துக்கொண்டு கடையின் முன்பு குவிந்து வருகின்றனர். ஒவ்வொரு கடையிலும் கூட்டம் அலைமோதி வரும் நிலையில் நீங்கள் டாய்லெட் பேப்பரை வாங்கி இருந்தால் உங்களுக்கு வழங்கப்படாது என்று அறிவிப்பு பலகை ஒவ்வொரு கடையிலும் முன்பும் வைக்கப்பட்டுள்ளது.