கொரோனா தொற்றை போக்குவதற்கு பணியாற்றி வரும் மருத்துவர்கள் , மருத்துவ பணியாளர்களுக்கு ஒரு மாத சிறப்பு ஊதியம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது கொரோனா அச்சுறுத்தல் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த பல்வேறு விஷயங்களை தமிழக முதலமைச்சர் சட்டசபையில் பேசி வருகின்றார். அந்த அடிப்படையில் பொதுமக்கள் அரசு எடுத்து வரக்கூடிய நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில் மக்கள் யாரும் அலட்சியம் காட்ட வேண்டும். ஒவ்வொரு உயிரும் நமக்கு முக்கியம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணிபுரிபவர்கள் , மருத்துவமனையை தூய்மைப்படுத்தும் பணியாளர்களுக்கு சிறப்பு ஊதியம் வழங்கப்படும் என்று ஒரு மாத ஊதியம், சிறப்பு ஊதியமாக அறிவித்தார். முன்னதாக அவர்களின் சேவையை பாராட்டும் விதமாக அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் கரவொலி எழுப்பி நன்றி செலுத்தினர்.