Categories
தேசிய செய்திகள்

புதுச்சேரியில் இன்று புதிதாக 18 பேருக்கு கொரோனா… பாதிப்பு எண்ணிக்கை 194ஆக உயர்வு!

புதுச்சேரியில் ஒரே நாளில் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் நேற்று வரை 176 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் 99 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 91 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் புதுச்சேரியில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில் இன்று ஒரே நாளில் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 194 ஆக அதிகரித்துள்ளது. புதுச்சேரியில் முதன்முதலில் டெல்லியில் இருந்து மாகி பகுதியை சேர்ந்த நபருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து புதிதாக பாதித்தவர்கள் தட்டாஞ்சாவடி, கொம்பாக்கம், சண்முகாபுரம், காமராஜர் நகர், நவசக்தி நகர், தட்டாஞ்சாவடி சுப்பையா நகர், பிள்ளையார்குப்பம் போன்ற பகுதிகளை சேர்ந்தவர்கள். கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள். கோரோனோ உறுதி செய்யப்படுபவர்கள் கதிர்காமத்தில் உள்ள கோவிட் மருத்துவமனை, ஜிப்மர் மருத்துவமனை மாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Categories

Tech |