கொரோனா நோய் பரவலால் துணை ராணுவப் படைகளில் 66 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு 7,900 பேர் பெற்று சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தியாவில் கடந்த ஒரு வருட காலத்திற்கு மேலாக கொரோனா நோய் பரவல் அதிகரித்துக்கொண்டே வருகிறது. சில மாதங்களாக இதனில் தாக்கம் குறைந்த நிலையில் மீண்டும் இரண்டாவது அலையாக மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த வளத்தை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையிலும், இதனை கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை.
இதில், தேசிய பாதுகாப்பு படை கமாண்டோ அதிகாரி பி.கே.ஜா. அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு நொய்டாவில் உள்ள மத்திய ஆயுதப்படை காவல்துறை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன்பின் சிகிச்சை பலனின்றி நேற்று காலையில் உயிரிழந்துள்ளார்.
கொரோனா தொற்று வைரசால் தேசிய பாதுகாப்பு படையின் முதல் உயிரிழப்பு இதுவாகும். இதுவரை துணை ராணுவ படைவீரர்கள் 66 ஆயிரம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது 7,900 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.