விருதுநகர் அருகே கொரோனா முகாமில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி தனிமைப்படுத்தப்பட்டோர் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி புறவழிச் சாலையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் கொரோனா முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் தற்போது 100 பெண்கள், 200 ஆண்கள் என மொத்தம் 300 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த முகாமில் போதிய அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை என புகார் எழுந்துள்ளது.
இந்த நிலையில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி முகாமில் தனிமைப்படுத்தப்பட்டோர் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே தனிமைப்படுத்தப்பட்டோரின் கோரிக்கையாகவும் உள்ளது.