கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் பொருட்டு அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவிவரும் நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தடுப்புகள் வைத்து அடைத்துள்ளனர். மேலும் அந்த பகுதியில் கிருமிநாசினி தெளித்தும், கபசுர குடிநீரை வழங்கியும் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நகராட்சி ஆணையர் பிரபாகரன், மாவட்ட வருவாய் அதிகாரி பொன்னம்மாள் போன்றோரின் தலைமையில் முகாம் அமைக்கப்பட்டு வீடு வீடாக சென்று அதிகாரிகள் கொரோனா தொற்று பரிசோதனை செய்துள்ளனர்.
அதன்படி இதுவரை மொத்தம் 1200 வீடுகளில் வசிக்கும் மக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்து முடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நகராட்சி ஆணையர் பிரபாகரன் கூறும்போது மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றியும், முககவசம் அணிந்தும் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார். மேலும் மக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்த்து, நடமாடும் வாகனங்கள் மூலம் விற்பனை செய்யப்படும் பொருட்களை வாங்கி அரசின் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு அழைக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.