உத்தரகாண்ட் மாநிலத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் 3000 உதவி தொகையும், வேலைவாய்ப்பில் 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று அம்மாநிலத்தின் முதல்வர் திரத் சிங் ராவத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் ஒவ்வொரு நாளும் கொரோனா தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. பல மாநிலங்களில் குழந்தைகள் தங்களது பெற்றோர்களை இழந்து தவித்து வருகின்றன. இதனால் அந்தந்த மாநிலத்தை சேர்ந்த முதல்வர்கள் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு உதவி தொகை வழங்கி வருகின்றது.
இதைத்தொடர்ந்து உத்தரகாண்ட் மாநிலத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு 21 வயது எட்டும் வரை அவர்களின் கல்வியை மாநில அரசு கவனித்துக் கொள்ளும் என்று முதல்வர் திரத் சிங் ராவத் தெரிவித்துள்ளார். மேலும் மாதந்தோறும் 3000 உதவி தொகை மற்றும் மாநில அரசு வேலைகளில் 5 சதவீத இட ஒதுக்கீடும் அவர்களுக்கு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.