கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக விதிக்கப்பட்ட நெறிமுறைகள் தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் மக்கள் கொரோனா வைரஸ்க்கு எதிராக பல்வேறு கட்டுப்பாடுகளை பின்பற்றி வருகின்றனர். அந்த வகையில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக முக கவசம் அணிதல், தனி மனித இடைவெளியை கடைபிடித்தல் போன்ற பல்வேறு கட்டுப்பாடுகளை மருத்துவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். மேலும் இரு நபர்களுக்கான தனி மனித இடைவெளியானது இரண்டு மீட்டர் என்று கூறப்பட்டுள்ளது. குறிப்பாக கொரோனா தொற்றை தடுப்பதற்காக பல்வேறு வழிகாட்டும் நெறிமுறைகள் கூறப்பட்டு வருகின்றன. இதனை தொடர்ந்து வைரஸின் தன்மை குறித்தும் தொடர்ந்து ஆய்வுகள் நடத்தப்படுகிறது. இந்த நிலையில் அண்மையில் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
அதில் “காற்றின் அளவு மற்றும் வீதம், வெவ்வேறு காற்றுகளுடன் தொடர்புடைய உட்புற காற்றோட்ட முறை மற்றும் திரவத்துளிகள் வெளியேற்றப்படுதல் ஆகிய மூன்று காரணிகளையும் வைத்து ஆய்வு செய்துள்ளனர். இந்த ஆய்விற்கான முடிவுகளானது “நிலையான நகரங்கள் மற்றும் சமூகம்” என்ற ஆய்வு இதழில் வெளியிடப்பட்டுள்ளது. இதனையடுத்து ஆய்வின் முடிகளில் கூறப்பட்டதாவது, ஒரு நபரிடம் இருந்து மற்றொரு நபருக்கு வைரஸ் திரவத்துளிகள் பரவுவதை தடுக்க தனி மனித இடைவெளி 6 மீட்டராக இருக்க வேண்டும். மேலும் மூக்கு மற்றும் வாய் பகுதிகளை சரியாக மறைத்தல், போதுமான காற்றோட்டம் முதலிய கட்டுப்பாடு நெறிமுறைகளை அமல்படுத்த வேண்டும் என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது.