உலக அளவில் முதன்முறையாக வீட்டு வளர்ப்பு நாய்க்குட்டி கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளது.
ஹாங்காங்கை சேர்ந்த பெண் ஒருவர் ஆசையாக பொமரேனியன் நாய்க்குட்டி ஒன்றை வளர்த்து வந்துள்ளார். இவருக்கு சில வாரங்களுக்கு முன் கொரோனோ வைரஸ் நோய் அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டது. இந்நிலையில் இவரிடம் இருந்து இவரது நாய்க்கும் வைரஸ் பரவியது.
இதையடுத்து இவருக்கு தனியார் மருத்துவமனையில் ஒருபுறம் சிகிச்சை அளிக்கப்பட, மற்றொரு கால்நடை மருத்துவமனையின் தனிப்பிரிவில் நாய்க்கும் அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அந்த நாய்க்குட்டி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து விட்டது. உலக அளவில் முதன்முறையாக சிகிச்சை பலனின்றி வீட்டு வளர்ப்பு நாய் கொரோனோ வைரஸால் உயிரிழந்தது இதுவே முதல் முறையாகும்.