Categories
தேசிய செய்திகள்

கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வந்தவர்களுக்கு மரணம் ஏற்பட வாய்ப்பு அதிகம்… ஆய்வில் அதிர்ச்சித் தகவல்…!!

கொரோனா நோய் தொற்றிலிருந்து மீண்டு வந்தவர்களுக்கு 6 மாதங்களில் இறப்பு நேரிட வாய்ப்பு அதிகம் என்று தெரிவித்துள்ளனர்.

உலக நாடு முழுவதும் ஒரு வருடத்திற்கு மேல் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருகின்றன. இதனின் தாக்கம் சில மாதங்களாக குறைந்த நிலையில், மீண்டும் இரண்டாவது அலையாக விஸ்வரூபம் எடுக்க தொடங்கியுள்ளது. இதனை கட்டுக்குள் கொண்டுவர பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டும் முடியவில்லை. இன்னும் சில மாதங்களில் கொரோனா நோய் தொற்று உச்சமடைய அதிக அளவில் வாய்ப்பு உள்ளது. இந்த உயிர்கொல்லி வைரஸால் நாளொன்றுக்கு பல்லாயிரம் கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு உயிரிழந்து வருகின்றன.

இந்த கொரோனா தொற்று வந்தவர்களுக்கு பல்வேறு விதமான பிரச்சனைகள் உடலில் ஏற்பட்டு உயிரிழப்பு நேரிடுகிறது. இது எவ்வாறு சாத்தியம் என்று அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக் கழக நிறுவன விஞ்ஞானிகள் ஆய்வு ஒன்றினை நடத்தியுள்ளனர். அந்த ஆய்வில் 87 ஆயிரம் கொரோனா நோயாளிகள் மற்றும் 50 லட்சம் குணமடைந்தவர்கள் கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இதன்படி குணம் அடைந்து வீடு திரும்பி அவர்களுக்கு சுவாசப் பிரச்சனை ஏற்பட்டு சில மாதங்களில் அனைத்து உறுப்புகளும் பாதிப்புக்கு உள்ளாகின்றன. இதன்மூலம் உலக மக்களுக்கு வருகின்ற ஆண்டு முழுவதும் மிகப் பெரிய சுமையை ஏற்படுத்தக்கூடும் என்று அச்சத்துடன் கூறியுள்ளனர்.

இது தொடர்பாக மூத்த விஞ்ஞானி சியாத் அல் அலி பேசியுள்ளார். அதாவது, நோய் குணம் அடைந்த 30 நாட்களில் இருந்து 6 மாதங்கள் வரை இவர்களுக்கான இறப்பு அபாயம் 60 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்த வகையில் நோய் குணமடைந்து ஆறு மாதங்களில் உயிரிழப்பு நேரிடும் என்று கூறியுள்ளார். எனவே கொரோனா நோயாளிகளை பரிசோதனை செய்யும்போது மருத்துவர்கள் விழிப்புணர்வுடன் பரிசோதனை செய்ய வேண்டும். இந்த நோயாளிகளுக்கு ஒருங்கிணைந்த மற்றும் பலதரப்பட்ட சிகிச்சைகள் அளிக்கப்பட வேண்டும் என்று சியாத் அல் அலி விஞ்ஞானி கூறியுள்ளார்.

Categories

Tech |