Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

கொரோனா தாக்கம் : சட்டப்பேரவை தொடர் நாளையுடன் நிறைவு …!!

இன்று காலை சட்ட பேரவை தலைவர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9ஆக உயர்ந்த நிலையில் ஒருவர் குணமடைந்து கண்காணிப்பில் உள்ளார். இதனிடையே ஏப்ரல் 9ஆம் தேதி வரை நடைபெறுவதாக இருந்த தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் 31ஆம் தேதியோடு முடிக்கப்படும் என்று கடந்த அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை  முழுவதுமாக ஒத்திவைக்க வேண்டுமென்று திமுக, காங்கிரஸ், இந்திய முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் சட்டசபை கூட்டத்தொடரை புறக்கணிதப்பதாக தெரிவித்தனர்.இதன் பின்னர் சபாநாயகர் தனபால் தலைமையில் கூடிய அலுவல் ஆய்வு கூட்டத்தில் அதிமுக மட்டுமே பங்கேற்ற நிலையில் நாளையொடு தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நிறைவு பெறுவதாக சபாநாயகர் அறிவித்தார்.

Categories

Tech |