தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் சோலோ குவேனிக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை அன்று அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.
அவர் ஏற்கெனவே கல்லியன் பேர் (Guillan-Barre) என்ற அரிதான ஒருவகை நோயுடன் போராடி வருகிறார். பாகிஸ்தானின் ஜாபர் சர்ப்ராஸ் மற்றும் ஸ்காட்லாந்தின் மஜித் ஹக் ஆகியோருக்குப் பிறகு இந்த நோயால் பாதிக்கப்பட்ட மூன்றாவது கிரிக்கெட் வீரர் இவர். இது கிரிக்கெட் வட்டாரங்களில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
ஜூலை 2019 இல், ஸ்காட்லாந்தில் கிளப் கிரிக்கெட் விளையாடும் போது, சோலோ குவேனிக்கு கல்லியன் பேரி (Guillan-Barre) கண்டறியப்பட்டது, இது உடலின் நோயெதிர்ப்பு அமைப்பான நரம்புகளைத் தாக்கும் ஒரு அரிய கோளாறு ஆகும்.