கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக நாடு முழுவதும் ஆக்சிஜன் சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.
இந்தியாவில் கொரோனா நோய் தொற்று 2-வது அலை மின்னல் வேகத்தில் பரவி வருகின்றது. இதனைக் கட்டுப்படுத்த பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்தியாவில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 42 லட்சத்து 91 ஆயிரத்து 917 ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 2 லட்சத்து 17 ஆயிரத்து 353 பேருக்கு புதிதாக தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் மருத்துவ மனைகளில் இருப்பதாக புகார் வந்துள்ளது. அதனால் நாடு முழுவதும் ஆக்சிஜன் சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். அனைத்து ஆக்சிஜன் நிலையங்களிலும் அதன் கொள்ளளவுக்கு ஏற்ப உற்பத்தியை தீவிர முறையில் அதிகரிக்க வேண்டும். அதன்பின் ஆக்சிஜன் சிலிண்டர்கள் உற்பத்தி செய்யும் நிலையங்கள் 24 மணி நேரமும் தொடர்ந்து செயல்பட பிரதமர் மோடி அனுமதி அளித்துள்ளார்.