பிரபல நடிகையை ஆண்ட்ரியாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாட்டு விதிகளும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனாவால் பலியாகுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. இதில் திரை பிரபலங்கள் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழ் சினிமாவின் பிரபல நடிகையாக வலம் வரும் ஆண்ட்ரியாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இதனை அவர் தனது சமூகவலைத்தள பக்கத்தில் மூலம் பகிர்ந்துள்ளார். மேலும், கடந்த வாரம் கொரோனா பரிசோதனை செய்தபோது எனக்கு பாசிட்டிவ் ரிசல்ட் வந்தது. இதையடுத்து நான் வீட்டில் தனிமை படுத்துக் கொண்டேன்.என்னை கவனித்துக் கொள்ளும் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு நன்றி. நன்றாக குணமடைந்து வருகிறேன் என்று கூறியுள்ளார்.