Categories
தேசிய செய்திகள்

கொரோனா எதிரொலி!!… அனைத்து மாநிலங்களிலும் மருத்துவ ஆக்சிஜன் இருப்பை உறுதி செய்ய மத்திய அரசு உத்தரவு….!!!!

உலக அளவில் சீனா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உருமாறிய பிஎப்7 கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், இந்தியாவில் ஒடிசா மாநிலத்தில் 3 பேருக்கு இந்த தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மத்திய அரசு கொரோனா கட்டுப்பாட்டு முறைகளை தீவிர படுத்தியுள்ளது. அதன்பிறகு மாநில அரசுகளுக்கும் மத்திய சுகாதாரத் துறை தொடர்ந்து கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது. அந்த வகையில் விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனை ‌ கட்டாயமாக்கப் பட்டுள்ளதோடு, பொது இடங்களில் கொரோனா விதிமுறைகளை மக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை அனைத்து மாநில சுகாதாரத் துறைக்கும் ஒரு கடிதம் எழுதி அனுப்பியுள்ளது. அதில் கடந்த முறை கொரோனா பரவலின் போது ஆக்ஸிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டதால் பல உயிரிழப்புகள் நடந்தது. எனவே இம்முறை அது போன்ற சம்பவங்கள் எதுவும் நடைபெற கூடாது. தற்போது கொரோனா பரவலின் தாக்கம் அதிக அளவில் இல்லை என்றாலும் அனைத்து மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிலையங்களில் ஆக்சிஜன் இருப்பை உறுதி செய்ய வேண்டும். அதன் பிறகு ஆக்சிஜன் சப்ளையையும் உறுதி செய்ய வேண்டும். மேலும் யூனியன் பிரதேசங்கள் மற்றும் மாநிலங்களில் ஆக்சிஜன் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டு ஆக்சிஜன் தொடர்பான பிரச்சனைகளை தீர்க்க வேண்டும் எனவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Categories

Tech |