பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 83 வயது மூதாட்டி சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. இந்நிலையில் கொரோனா பாதிப்பும், அவற்றால் ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 83 வயது மூதாட்டி ஒருவர் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதனால் கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை பெரம்பலூர் மாவட்டத்தில் 55 ஆக அதிகரித்துள்ளது. அதேசமயம் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 5,031 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் 62 பகுதிகள் கொரோனா பாதித்த இடமாக அறிவிக்கப்பட்டு தடை செய்யப்பட்டுள்ளது.