சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 190க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. அதிகமான பாதிப்பை பெற்றுள்ள அமெரிக்காவில் மட்டும் கொரோனா வைரஸ் 1,12,314 பேரை பாதித்துள்ளது. 1,873 பேர் இறந்துள்ள நிலையில் 3,219 குணமடைந்துள்ளனர்.
கொரோனா பாதித்த 107,222 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 2,666 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அங்குள்ள நியூயார்க்கில் மட்டும் அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அங்குள்ள நியூயார்க்கில் மட்டும் 46,262 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதில் 606 பேர் உயிரிழந்துள்ளனர். 43,611 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அடுத்தபடியாக நியூ ஜெர்சியில் 8,825 பேர் கொரோனா நோய் தொற்றில் பாதிக்கப்பட்டு 108 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 8,717 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதனை தொடர்ந்து கலிபோர்னியாவில் 4,905 பேர் பாதிக்கப்பட்டதில் 102 பேர் உயிரிழந்து 4,782 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நான்காவது அதிகம் பாதித்த பகுதியாக உள்ள புளோரிடாவில் 3,763 பேர் பாதிக்கப்பட்டதால் 54 பேர் உயிரிழந்துள்ளனர். 3,709 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஐந்தாவதாக கொரோனாவில் அதிகம் பாதித்த பகுதியாக உள்ள வாஷிங்டனில் 3,723 பேர் பாதிக்கப்பட்டதில் 175 பேர் உயிரிழந்து, 3,424 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.