Categories
தேசிய செய்திகள்

கொரோனா ஊரடங்கு : பெண்களுக்கு எதிராக அதிகரித்த குற்றம் – அதிர்ச்சி புள்ளி விவரம் …!!

ஊரடங்கு உத்தரவு காலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாக தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 21 நாள் ஊரடங்கு உத்தரவை பிரதமர் மோடி பிறப்பித்ததையடுத்து மக்கள் அனைவரும் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். நாடே வெறிச்சோடி இருக்கிறது. அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டும் மக்கள் வெளியே சென்று, பொருட்களை வாங்கி வருகின்றனர். தேவையில்லாமல் மக்கள் யாருமே வெளியே வரவில்லை. வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தாலும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாக சமீபத்திய ஆய்வு தெரிவித்துள்ளது. இந்த தகவலை தேசிய மகளிர் ஆணையம் வெளியிட்டுள்ளது.

பெண்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்கும் இந்த காலகட்டத்தில் அவர்களுக்கு எதிரான  குற்றங்கள் அதிக அளவில் நடைபெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் 23-ஆம் தேதி முதல் ஏப்ரல் 1ம் தேதி வரை 257க்கும் மேற்பட்ட பெண்கள் தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்று உதவியை எதிர்பார்த்துள்ளதாக தேசிய மகளிர் மகளிர் ஆணையத்தின் புள்ளி விவரம் சொல்கிறது. இதில் 13 பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவது புகார் எழுந்துள்ளது. 69 பெண்களுக்கு குடும்ப பிரச்சனை பிரதானமாக இருந்துள்ளது.

77 பெண்கள் வரதட்சனை சம்பந்தமான கொடுமையை சந்தித்துள்ளதாக தெரிவித்துள்ள தேசிய மகளிர் ஆணையம் சில பெண்களுக்கு இணையம் மூலமாக பாலயல் சீண்டல் அரங்கேறி உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளதது. இந்த குற்றங்கள் அதிகமாக நடந்த மாநிலங்கள் வரிசையில் உத்தரப்பிரதேசம் முதலிடத்திலும்,  தலைநகர் டெல்லி இரண்டாம் இடத்திலும், ஒடிசா மூன்றாவது  இடத்திலும் இருக்கின்றன.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ...

ஊரடங்கு காலத்தில் யாரும் வெளியே வரமுடியாத சூழல் உருவாகி உள்ளதால் பெண்கள் காவல் நிலையத்திலும் புகார் கொடுக்க அச்சமடைந்து வீட்டுக்குள்ளே இருப்பதன் காரணமாகவும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பதாக தேசிய மகளிர் ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது.  இது குறித்த புகார்களை புகார்களும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்க என்ற மின்னஞ்சலுக்கு அல்லது 181 என்ற மொபைல் என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என்றும் தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |