Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 90 ஆக உயர்வு… மாநகராட்சி அறிவிப்பு..!!

சென்னையில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 90 ஆக உயர்ந்துள்ளது என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

தண்டையார்பேட்டையில் 38, கோடம்பாக்கத்தில் 17, வளசரவாக்கத்தில் 9, அண்ணாநகர் மண்டலத்தில் 8 என கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளன. கொரோனா பாதிப்பு காரணமாக சென்னையில் கட்டுப்பாட்டு பகுதிகளின் எண்ணிக்கை கடந்த வாரம் 360ஆக இருந்தது. அதிகபட்சமாக ராயபுரத்தில் 78 தெருக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இருப்பினும் சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. சென்னையில் நேற்று மட்டும் 1,380 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 44,205ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் மட்டும் இதுவரை கொரோனோவால் 654 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 24,670 பேர் குணமடைந்துள்ள நிலையில் 18,372 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில், குறிப்பாக ராயபுரம், கோடம்பாக்கம், தேனாம்பேட்டை, தண்டையார்பேட்டை உள்ளிட்ட 11 மண்டலங்களில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக நாளுக்கு நாள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

Categories

Tech |