தென்காசியில் புதிதாக 2 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 85 ஆக அதிகரித்துள்ளது. நேற்று வரை தென்காசி மாவட்டத்தில் 83 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் நேற்று வரை 51 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் சிகிச்சையில் 32 பேர் உள்ளனர். இந்த நிலையில் இன்று சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளன.
நேற்று வரை தமிழகம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14,753 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 98 ஆக உயர்ந்துள்ளது. கொரோனவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 7,128 ஆக அதிகரித்துள்ளது. மேலும், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு திரும்பியவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.