Categories
காஞ்சிபுரம் சிவகங்கை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

செங்கல்பட்டில் 40, காஞ்சிபுரத்தில் 15 பேருக்கு இன்று கொரோனா உறுதி!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மேலும் 40 பேருக்கும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று மேலும் 15 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மேலும் 40 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 538 ஆக உயர்ந்துள்ளது. நேற்று வரை இந்த மாவட்டத்தில் 498 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் 187 பேர் சிகிச்சை பெற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மேலும் இதுவரை 4 பேர் கொரோனா காரணமாக உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில், இன்று மேலும் 40 பேருக்கு தொற்று உறுதியானதை தொடர்ந்து 346 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். கோயம்பேடு சந்தையில் இருந்து திரும்பிய வியாபாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் என பலருக்கு கொரோனா தொற்று தற்போது உறுதியாகி வருகிறது. அதேபோல பல்வேறு மாநிலங்களில் இருந்து செங்கல்பட்டு திரும்பியவர்களில் சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதேபோல காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேலும் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 201 ஆக அதிகரித்துள்ளது. நேற்று வரை காஞ்சிபுரத்தில் 186 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியிருந்தது. அதில் 107 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் இதுவரை கொரோனாவுக்கு ஒருவர் பலியாகியுள்ளார். இந்த நிலையில், நேற்றுவரை 78 பேர் சிகிச்சையில் இருந்த நிலையில், இன்று 93 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்

Categories

Tech |