Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 78 ஆயிரத்தை தாண்டியது – மாநில வாரியாக முழு விவரம்!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 78 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 74,281லிருந்து 78,003ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 3,722 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 134 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 1,849 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 26,235ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 2,549ஆக உயர்ந்துள்ளதாகவும், கொரோனோவில் இருந்து மீண்டவர்கள் விகிதம் 33.63%ஆக உள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் அளித்துள்ளது.

அதிகபட்சமாக  மகாராஷ்டிராவில் 25,922 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 5,547ஆக உயர்வு; உயிரிழந்தோர் எண்ணிக்கை 975ஆக உயர்ந்துள்ளது. குஜராத் – 9.267, தமிழ்நாடு – 9,227, டெல்லி – 7,998, ராஜஸ்தான் – 4,328 பேர் பாதிக்கப்பட்டுள்னர். மத்தியபிரதேசம் – 4,173, உத்தரபிரதேசம் – 3,729, ஆந்திரா – 2,237 பஞ்சாப் – 1,924 மேற்கு வங்கம் – 2,290, உத்தர பிரதேசம் – 3,664, ஆந்திரா – 2090, பஞ்சாப் – 1,914, மேற்கு வங்கம் – 2,174, தெலுங்கானா – 1,367, ஜம்மு – காஷ்மீர் – 971, கர்நாடகா – 959, ஹரியானா – 793 பீகார் – 940, கேரளா – 534 பேரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் தற்போது 49,219 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் மே 17ம் தேதி வரை 3ம் முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. ஊரடங்கு நிறைவடைடைய இன்னும் மூன்று நாட்களே இருக்கும் நிலையில் 4ம் கட்டமாக ஊரடங்கை நீட்டிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்தியாவில் அமல்படுத்தப்பட உள்ள லாக்டவுன் 4 மிகவும் மாறுபட்டதாக இருக்கும், மே 18ம் தேதிக்கு முன் இதற்கான விவரங்கள் வெளியிடப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளது குறிபிடத்தக்கது.

Categories

Tech |