தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் மக்கள் அச்சம் அடைந்து இருந்தனர்.
இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா வைரஸின் தாக்கம் தமிழகத்திலும் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகின்றது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு நாளும் கொரோனாவின் தாக்கம் குறித்து தமிழக சுகாதாரத்துறை சார்பில் தகவல் கொடுக்கப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக சுகாதாரத்துறை செயலாளர் விஜயபாஸ்கர் கூறும் போது தமிழகத்தில் புதிதாக ஒரு டெஸ்ட்டிங் லேப் அனுமதி கிடைத்துள்ளதால், இந்தியாவிலே அதிகமான டெஸ்டிங் லேப்பாக 27 என்ற எண்ணிக்கையில் உள்ளது. இன்று ஒரே நாளில் 37 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் 118 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர் என்று தெரிவித்தார்.
இன்று ஒரே நாளில் 38 பேர் குணம் அடைந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ள தகவல் மக்களிடையே நம்பிக்கை ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில் கொரோனா ஏற்பட்டால் உயிரிழப்பு என்ற பீதி இருந்து வந்த நிலையில் மக்களின் மக்கள் கொரோனா பாதித்தவர்களை நாம் காப்பாற்ற முடியும் என்பதை நிரூபிக்கும் வகையில் இருந்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டியால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.