சேலம் மாவட்டத்தில் சார்வாய் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்திலுள்ள தலைவாசல் பகுதியில் சார்வாய் ஊராட்சி மன்ற அலுவலம் அமைந்துள்ளது. அந்த அலுவலகத்தில் பொதுமக்கள் நலன் கருதி அப்பகுதியிலுள்ள பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டுள்ளது. இந்த பணியை ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்வாணன் தொடங்கி வைத்துள்ளார்.
அந்த நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் அமுதா, ஊராட்சி செயலாளர் சிவக்குமார் மற்றும் வார்டு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டுள்ளனர். இதனையடுத்து பொதுமக்களுக்கு கொரோனா தொற்று பரவாமல் தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன் முககவசமும் வழங்கப்பட்டுள்ளது.