சேலம் மாவட்டத்தில் காவல் துறையினர் சார்பில் வாகனங்கள் மூலம் கொரோனா தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர்.
தமிழகத்தில் கொரோனாவின் 2 வது அலை அதிகரித்து வருவதால் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த அரசு அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சேலம் மாநகர காவல் துறையினர் சார்பில் பள்ளப்பட்டி மற்றும் அழகாபுரம் பகுதிகளிலுள்ள பொதுமக்களுக்கு வாகனங்கள் மூலம் கொரோனா குறித்த விழிப்புணர்வு பள்ளப்பட்டி காவல் நிலையம் முன்பு நடைபெற்றுள்ளது.
அந்த விழிப்புணர்வில் சேலம் மேற்கு சரக காவல் துறை உதவி கமிஷனர் நாகராஜன் கலந்து கொண்டு 10 க்கும் மேற்பட்ட கொரோனா விழிப்புணர்வு பிரச்சார வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார். இதனையடுத்து புதிய பேருந்து நிலையத்திற்கு வந்த பொதுமக்களுக்கு கபசுர குடிநீர், முககவசம் மற்றும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளனர்.