மனைவிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து அவரை தனிமைப்படுத்தி விட்டு வீட்டிற்குள் நான்கு பெண்களை அழைத்து வந்து குடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அகமதாபாத்தில் உள்ள கிரீன் அவென்யூ என்ற பகுதியில் வசித்து வரும் ஒரு பெண்ணிற்கு கடந்த வாரத்திற்கு முன்பு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டார். இதை சாதகமாக பயன்படுத்தி கொண்ட அவரது கணவர் நான்கு பெண் நண்பர்களை அழைத்து மது விருந்து வைத்துள்ளார். அந்த விருந்தில் கலந்து கொண்ட பெண்ணின் கணவர் ஒருவர் ஊரடங்கு சமயத்தில் இதுபோன்று மது அருந்தி விட்டு கும்மாளம் அடித்து வருகிறார்கள் என்று காவல் துறையிடம் புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து அகமதாபாத் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அங்கு குடி போதையில் இருந்த பெண்களிடம் விசாரணை நடத்தினர். இரவு நேரத்தில் மது பார்ட்டிக்கு தடைவிதித்துள்ளது பற்றி அவர்களிடம் கூறியும் அதை பொருட்படுத்தவில்லை. இதை தொடர்ந்து அவர்கள் 4 பேரும் மற்றும் அந்த கொரோனா பாதித்த பெண்ணின் கணவனை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.