Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

வீரியம் – விளைவு அதிகம்… உழைச்சது போதும்…. வீட்டில் இருங்க… நடிகர் ட்விட்…!!

கொரோனோ தாக்கம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நடிகர் டேனியல் பாலாஜி கருத்து தெரிவித்துள்ளார்.

தற்போது கொரோனோ வைரஸின் தாக்கம் இந்தியாவில் படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதுகுறித்து திரை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு நாள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பதிவுகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில்,

பிரபல நடிகர் டேனியல் பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில் கொரோனா குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.  அதில், கொரோனாவின் வீரியம் தெரியாமல் அறிவுரையை மதிக்காமல் விளையாட்டுத்தனமாக இருக்கின்றனர். அதனுடைய தாக்கம் மிகப் பெரிய விளைவை ஏற்படுத்தும். இத்தனை நாள் குடும்பத்திற்காக உழைத்த நீங்கள் இரண்டு வாரத்திற்கு வீட்டிற்குள் இருந்தால் வீடும் நாடும் நலம் பெறும் பின் கொரோனாவை வென்றிடலாம் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |