கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கர்நாடக மாநில பள்ளிகளுக்கு நாளை முதல் மூன்று வாரங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு உள்ள நிலையில் கர்நாடக மாநிலம் பெலகிரி மாவட்டத்தில் அரசின் விட்டியகாமா திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு பாடம் நடத்தப் பட்டு வந்தது. இதில் 24 தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த சம்பவத்தின் எதிரொலியாகவும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் நலன் கருதியும் நாளை முதல் வரும் 30ஆம் தேதி வரை 3 வாரங்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கும்படி பள்ளி கல்வித்துறை அதிகாரிகளுக்கு அம்மாநில முதலமைச்சர் திரு எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார்.