மும்பையில் 53 பத்திரிகையாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பத்திரிகையாளர்கள் 171 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்ட நிலையில் 53 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்களுக்கு கொரோனா அறிகுறி இல்லை என மும்பை மாநகராட்சி தகவல் அளித்துள்ளது.
இந்தியாவில் புதிதாக 1,553 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 17,265 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 36 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 559ஆக அதிகரித்துள்ளது
கொரோனா பதிப்பில் இருந்து குணமடைத்து வருவோரின் விகிதம் 14.75%ஆக உள்ளதாகவும், நாட்டில் கோரோனோ பாதித்த 2,842 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 14 நாட்களில் 59 மாவட்டங்களில் கொரோனா தொற்று எதுவும் பதிவாகவில்லை.
மேலும் ஊடகவியலாளர்கள் கொரோனாவால் பாதிக்கப்படுவது வருத்தமளிக்கிறது என்றும் ஊடகவியலாளர்கள் யாருக்கெல்லாம் கொரோனா பரிசோதனை தேவைப்படுகிறதோ அவர்களுக்கு உடனைடியாக பரிசோதனை நடத்தப்படும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.