Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

அதிகரித்து வரும் பாதிப்புகள்… மேலும் ஒரு உயிரிழப்பு… கொரோனாவின் கோர தாண்டவம்..!!

பெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் 236 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில் வேப்பந்தட்டை வட்டாரத்தை சேர்ந்த 78 பேரும், பெரம்பலூர் வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 98 பேரும், ஆலத்தூர் வட்டாரத்தை சேர்ந்த 29 பேரும், வேப்பூர் வட்டாரத்தை சேர்ந்த 31 பேரும் என மொத்தம் 236 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை பெரம்பலூர் மாவட்டத்தில் 8,905 ஆக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா வி.அகரம் நடுத்தெருவில் வசித்து வந்த 57 வயது ஆண் ஒருவர் கொரோனா தொற்று காரணமாக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்துவிட்டார்.

இதனால் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை பெரம்பலூர் மாவட்டத்தில் 63 ஆக அதிகரித்துள்ளது. அதே சமயம் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 6 ஆயிரத்து 362 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 2,480 பேர் மருத்துவமனைகளில் கொரோனா தொற்றிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Categories

Tech |