சிவகங்கை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 120 பேர் கொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. மேலும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த சிவகங்கையை சேர்ந்த 60 வயது முதியவர் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் இறந்து விட்டார். தற்போது 1,605 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 120 பேர் நேற்று ஒரே நாளில் கொரோனாவிலிருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்று மருத்துவ நிர்வாகம் தகவல் அளித்துள்ளது.