கொரோனா வைரஸின் நான்கு ஸ்டேஜ்கள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காண்போம்.
IMPORTED STAGE :
இதுதான் முதல் கட்டம். இதன்படி வெளிநாட்டில் இருந்து பயணம் மேற்கொண்டு இந்தியா வந்தவர்களுக்கு மட்டும் கொரோனா பாதிப்பு இருக்கும். அவர்களை ட்ராவல் ஹிஸ்டரி மூலம் கண்டறிந்து தனிமைப்படுத்தினால் போதும் வைரஸை கட்டுப்படுத்திவிடலாம்.
LOCAL TRANSMISSION :
தற்போது இந்த சூழ்நிலை தான் இந்தியாவில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. ஆரம்ப காலகட்டத்தில் விமான நிலையங்களில் கடும் பரிசோதனை மேற்கொள்ளப்படாததால், இந்த இரண்டாம் கட்ட நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டது. இதன்மூலம் வெளிநாட்டிலிருந்து வந்த கொரோனா நோயாளிகள், தங்களது குடும்பத்தார், பக்கத்து வீட்டார், உறவினர்கள் என யார் யாருக்கெல்லாம் தொற்றை பரப்பி உள்ளனர் என்பதை ஆராய்ந்து ட்ரெஸ் செய்து அவர்களை முடிந்த அளவிற்கு தனிமைப்படுத்தி நோயை கட்டுக்குள் கொண்டுவரலாம். இந்த கட்டத்திலும் ஓரளவுக்கு வைரஸை டிரஸ் செய்வது சுலபம்தான்.
COMMUNITY TRANSMISSION :
இதுதான் இருப்பதிலேயே மிக மோசமான சூழ்நிலை. இதன்மூலம் நேரடியாக கொரோனா பரவாமல் தாறுமாறாக பெருகுவது. உதாரணமாக கூற வேண்டும் என்றால், ஒருவருக்கு கொரோனா இருப்பதாக எடுத்துக்கொள்வோம். அவர் அவரது நண்பரை சந்திக்கிறார். அவரது நண்பர் மேலும் ஒரு பத்து நபரை சந்திக்கிறார் எனில், அதில் பத்தாவது நபருக்கு கொரோனா ஏற்பட்டிருக்கும். இந்த பாதிப்பு முதலில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபரால் அந்த பத்தாவது நபருக்கு ஏற்பட்டிருக்கும். ஆனால் இவருக்கும் , அந்த 10வது நபருக்கும் எந்த தொடர்புமில்லை. இதற்கு பெயர் தான் COMMUNITY TRANSMISSION. இதனை ட்ரெஸ் செய்வது மிக கடினம். எங்கிருந்து யார் மூலம் பரவுகிறது. யார் யாரிடம் கொரோனா இருக்கிறது என்பதை கண்டறிவது மிகவும் கடினம்.
EPIDEMIC :
கண்ணிற்கு தெரியாத தூரம் வரை இந்த வைரஸ் பரவி கொண்டே இருக்கும். அதற்கு ஒரு முடிவே இல்லாமல் சென்றுவிடும். கொரோனாவிற்கு மருந்து கண்டு பிடிக்காத இந்த சூழ்நிலையில் அதனை தாறுமாறாக பரவச் செய்வது எவ்வளவு பெரிய ஆபத்தான செயல் என்பதை மக்கள் உணர்ந்து அரசாங்கம் கூறிய 21 நாள்கள் மூடிக்கொண்டு வீட்டில் இருப்பது நல்லது. அதையும் மீறி எனக்கு கொரோனா வராது எனக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் என்று கூறி வெளியே சுற்றித் திரிந்தால், நீங்கள் அறிவு கெட்ட முட்டாள் என்று இந்த உலகத்திற்கு தெரியும். ஆனால் கொரோனாவுக்கு தெரியாது. ஆகவே மிகுந்த பயம் வேண்டாம். அதேசமயம் அலட்சியமும் வேண்டாம். வீட்டிற்குள்ளேயே இருப்போம் தேசத்தை காப்போம்.