Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

வேகமெடுத்து பரவும் கொரோனா… அதிகரித்து வரும் பலி எண்ணிக்கை… கோரப்பிடியில் சிக்கி தவிக்கும் மக்கள்..!!

பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த வாலிபர் ஒருவர் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்துவிட்டார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் ஒரு சில இடங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. மேலும் பலி எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனாவால் ஏற்கனவே 35 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் கொரோனா தொற்றிற்க்கு பெரம்பலூர் தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 30 வயது ஆண் ஒருவர் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்துவிட்டார். இதனால் பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 36 ஆக அதிகரித்துள்ளது.

Categories

Tech |