Categories
மாநில செய்திகள்

CORONA: மீண்டும் ரெடியா இருங்க…. அதிகாரிகளுக்கு முதல்வர் அதிரடி உத்தரவு….!!!!!

கொரோனா தொற்றுப்பரவல் அதிகரித்து வரும் நிலையில், தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமை செயலாளர் இறையன்பு, தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சைலேந்திரே பாபு, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

கொரோனா தொற்று பரவல் தற்போது அதிகரித்து வரும் காரணமாக பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 2,069 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து தொற்றுப் பரவல் அதிகரித்து வருவதால், சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 11,094 ஆக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கலாமா என்பது குறித்து முதலமைச்சர் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும், விழிப்புணர்வு பணிகளை தீவிரப்படுத்துவது குறித்து அறிவுறுத்தல் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. தொற்று எண்ணிக்கை மேலும் அதிக அளவில் அதிகரித்தால் கொரோனா சிகிச்சை மையங்களை தயார் நிலையில் வைக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தொற்று பாதிப்பு தற்போது உயர்ந்தாலும், நோயின் தாக்கம் குறைவாக இருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Categories

Tech |