தமிழகத்தில், சென்னை மாநகரில் 15 மண்டலங்களில் பொதுமக்கள் முக கவசம் அணிவதை உறுதிப்படுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்றுப் பரவல் மீண்டும் படிப்படியாக அதிகரித்து வருகின்றது. இதனால் தமிழக அரசு முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது உள்ளிட்ட நெறிமுறைகளை கட்டாயமாக்கி வருகின்றது. முகக்கவசம் அணியாமல் வெளியில் செல்பவர்களுக்கு ரூபாய் 500 அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சென்னை உள்ள நகரங்களில் மக்கள் முகக்கவசம் அணியாமல் அலட்சியத்துடன் செல்கின்றன. இதனால் சென்னை மக்களுக்கு மாநகராட்சி சார்பில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முக கவசம் அணியாவிட்டால் அபராதம் விதிக்கும் நடைமுறையை தீவிர படுத்த உத்திரவிடப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் மாஸ்க் அணியாவிட்டால் நாளை முதல் 500 அபராதம் விதிக்கப்படும் என்ற மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது . வணிக வளாகங்கள், திரையரங்குகள், மார்க்கெட் போன்ற இடங்களில் மாஸ்க் அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படும். அங்காடிகளில் சமூக இடைவெளியை பின்பற்றி பொதுமக்களை அனுமதிக்க வேண்டும். வணிக நிறுவனங்களில் ஊழியர்கள் கட்டாயம் மாஸ்க அணிந்திருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.