தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக தலைநகர் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம்,திருவள்ளூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் அந்தந்த மாவட்டங்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் அரசு அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களில் அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக தமிழக பள்ளிகளில் மாணவர்களுக்கு முக கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.தற்போது கல்லூரிகளில் மாணவர்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என அமைச்சர் சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார். மேலும் கொரோனா பாதிப்பு அதிகமானதால் கோவிட் கேர் சென்டர்களை மீண்டும் திறந்து தயார் நிலையில் வைத்திருக்க அறிவுறுத்தியுள்ளார்