மக்கசோளத்தின் மருத்துவ குணம் குறித்து இந்த செய்திதொகுப்பில் காண்போம்.
மக்காச்சோளத்தில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் மலச்சிக்கலை தீர்க்கும் உணவாக மக்காச்சோளம் அமைகிறது. மேலும் நீரிழிவு நோய்க்கும் இது மிகச்சிறந்த உணவு என்பதால் நீரிழிவு நோயாளிகள் இதனை சாப்பிட்டால் நோய் குணமாக வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் சிறுநீரை பெருக்கும் சக்தி மக்காச்சோளத்துக்கு இருப்பதன் காரணமாக உடலில் உள்ள கொழுப்புக்களை கரைத்து சிறுநீராக மாற்றி, வெளியேற்றி உடலுக்கு நன்மை பயக்கிறது. கொழுப்பை கரைத்துவிடும் சக்தி இதற்கு இருப்பதால் இதய நோய் உள்ளிட்டவற்றுக்கு வாய்ப்பில்லாமல் செய்து விடுகிறது.