அத்தியாவசிய தேவை இன்றி இருசக்கர வாகனங்களில் சுற்றுபவர்களை பிடித்து காவல்துறையினர் கொரோனா பரிசோதனை செய்ததோடு அபராதம் விதித்துள்ளனர் .
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக அரசு சில தளர்வுகள் உடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனால் காவல்துறையினர் அத்தியாவசிய தேவை இன்றி வெளியே சுற்றுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வண்ணார்பேட்டை பகுதியில் அத்தியாவசியத் தேவை இன்றி பொதுமக்கள் பல்வேறு இடங்களில் சுற்றித் திரிகின்றனர். இதனை அடுத்து பொது மக்கள் கூடுவதை தடுக்கும் பொருட்டு அப்பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அதன்பின் காவல்துறையினர் இ-பதிவு இல்லாமல் பயணம் செய்தவர்களையும், இருசக்கர வாகனங்களில் அத்தியாவசிய தேவை இன்றி சுற்றித் திரிந்தவர்களையும் பிடித்தனர். இதனை அடுத்து காவல்துறையினர் விதிகளை மீறிய குற்றத்திற்காக அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ததோடு அபராதம் வசூலித்து உள்ளனர்.