Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தட்டி கேட்ட தொழிலாளி….. பீர் பாட்டிலால் தாக்கிய வாலிபர்கள்…. போலீஸ் நடவடிக்கை…!!

கூலித் தொழிலாளியை பீர் பாட்டிலால் தாக்கிய குற்றத்திற்காக 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கணபதிபாளையம் பகுதியில் கூலி தொழிலாளியான கதிர்வேல் என்பவர் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்த கதிர்வேல் சிலர் வழித்தடத்தில் உட்கார்ந்து மது அருந்தி கொண்டிருந்ததை பார்த்துள்ளார். இதனை அடுத்து பொது இடத்தில் வைத்து இவ்வாறு மது குடிக்கலாமா என்று கதிர்வேல் அவர்களை தட்டிக் கேட்டுள்ளார். இது குறித்து கதிர்வேல் அளித்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் மது குடித்து கொண்டிருந்தவர்களை எச்சரித்து அனுப்பி வைத்துள்ளனர்.

இந்நிலையில் வழக்கம்போல கதிர்வேல் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது காவல்துறையினரிடம் சொல்லி கொடுத்தது தொடர்பாக கதிர்வேலுக்கும், அந்த நான்கு வாலிபர்களும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கோபமடைந்த அவர்கள் பீர் பாட்டிலால் கதிர்வேலின் தலையில் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனை அடுத்து அருகில் உள்ளவர்கள் கதிர்வேலை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்து கதிர்வேல் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கார்த்திக், மஞ்சுநாதன், செல்வகுமார், அசோகன் ஆகிய 4 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |