மனைவி சேர்ந்து வாழ மறுப்பு தெரிவித்ததால் தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்திலுள்ள செம்மண்டலம் பகுதியில் தமிழ் செல்வன் என்ற தொழிலாளி வசித்து வந்துள்ளார். இவருக்கு பிரியங்கா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக பிரியங்கா கணவரை விட்டு பிரிந்து பெற்றோர் வீட்டில் தனது குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இதனை அடுத்து தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு தமிழ்செல்வன் பிரியங்காவிடம் அடிக்கடி கூறியுள்ளார்.
ஆனால் ப்ரியங்கா தொடர்ந்து அதற்கு மறுப்பு தெரிவித்ததால் மன உளைச்சலில் இருந்த தமிழ்ச்செல்வன் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதற்கிடையில் தமிழ்ச்செல்வன் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் தன்னுடைய இரண்டு குழந்தைகளையும் நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள் எனவும், நான் மீண்டும் பிறந்து வருவேன் எனவும் கூறியுள்ளார். இதனையடுத்து தனது அம்மா மற்றும் இரண்டு சகோதரிகளையும் நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள் எனவும், என்னுடன் தற்போது எனது மனைவி இல்லை எனவும் அந்த வீடியோவில் அவர் கூறியுள்ளார். தற்போது சமூக வலைதளங்களில் தமிழ்ச்செல்வன் பேசிய வீடியோ வேகமாக பரவி வருகிறது.