கூலித்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கூலி தொழிலாளியான சதீஷ்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் செலவுக்காக பலரிடம் கடன் வாங்கியுள்ளார். ஆனால் வாங்கிய கடனை திருப்பி செலுத்த இயலவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த சதீஷ்குமார் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதனையடுத்து மயங்கிய நிலையில் கிடந்த சதீஷ்குமாரை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சதீஷ்குமார் பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.