சிறுமியை கடத்தி சென்று குடும்பம் நடத்திய குற்றத்திற்காக கூலித் தொழிலாளியை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள திருப்பெயர் கிராமத்தில் சக்திவேல் என்ற கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். இந்நிலையில் சக்திவேல் அதே பகுதியில் வசிக்கும் 16 வயது சிறுமியை கடத்தி சென்றுள்ளார். மேலும் இருவரும் கடந்த நான்கு மாதங்களாக கணவன் மனைவியாக குடும்பம் நடத்தி வந்துள்ளனர்.
இதுகுறித்து சிறுமியின் தாயார் பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சக்திவேலை கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர்.