Categories
அரசியல் கிரிக்கெட் தேசிய செய்திகள் விளையாட்டு

“கேப்டன் COOL” ஆனால் களத்துல அனல்….. WE MISS ஹெலிகாப்டர் ஷாட்…. அமித்ஷா ட்விட்….!!

தோனியின் ஓய்வு குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். 

நட்சத்திரங்களைப் போல் எண்ணிலடங்காத ரசிகர்களை சம்பாதித்து உள்ள பிரபல கிரிக்கெட் வீரர் எம்எஸ் தோனி இன்டர்நேஷனல் கிரிக்கெட் விளையாட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இவரது இந்த அறிவிப்பு பலருக்கு அதிர்ச்சியையும், பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து பல பிரபலங்களும், திரையுலகினரும் அரசியல் கட்சி தலைவர்களும், தோனி ஓய்வு குறித்து தங்களது கருத்துகளை சமூக வலைதளங்களில் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில்,

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது ட்விட்டர் பக்கத்தில், இந்திய கிரிக்கெட்டுக்காக ஈடு இணையற்ற பங்களிப்புகளை தந்துள்ள தோனிக்கு உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான ரசிகர்கள் நன்றி கூறுகிறார்கள். அவர்களோடு நானும் இணைகிறேன். தோனி மிகவும் கூல் ஆனவர். ஆனால் களமிறங்கினால் போட்டியில்  அனல் பறப்பது நிச்சயம். உலக கிரிக்கெட் போட்டி உங்கள் ஹெலிகாப்டர் ஷாட்டை மிஸ் செய்கிறது தோனி என ட்விட் செய்துள்ளார். 

Categories

Tech |