குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இன்று எலிமினேட் செய்யப்பட்ட போட்டியாளர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் . தற்போது இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் மிக கலகலப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இறுதிப் போட்டியை நோக்கி நகர்ந்து வரும் இந்த நிகழ்ச்சியில் பாபா பாஸ்கர், சகிலா ,அஸ்வின் ,கனி, பவித்ரா ஆகியோர் விளையாடி வருகின்றனர்.
கடந்த வாரம் சிறப்பாக சமைத்து பாபா பாஸ்கர் இம்யூனிட்டி வென்றதால் இந்த வாரம் அவர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. மேலும் இந்த வாரம் எலிமினேஷன் இருக்கும் என்பதால் மீதமுள்ள அஸ்வின் ,கனி, பவித்ரா, சகிலா ஆகியோரில் ஒருவர் இன்று எலிமினேட் செய்யப்படுவர். இந்நிலையில் இன்று இந்த நிகழ்ச்சியிலிருந்து பவித்ரா வெளியேறியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையறிந்த அவரது ரசிகர்கள் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர்.