குக் வித் கோமாளி பிரபலம் தர்ஷா தான் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார் .
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘செந்தூரப்பூவே’ என்ற சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி வருபவர் தர்ஷா குப்தா. இவர் மக்கள் அதிகம் விரும்பும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் அதிக அளவு பிரபலமடைந்தார் . கடந்த வாரம் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார் .
🥰Rudhrathandavam Aarambam🥰 pic.twitter.com/v7MPzOViKe
— ❤️Dharsha❤️ (@DharshaGupta) January 13, 2021
இதனிடையே ‘திரௌபதி’ பட இயக்குனரின் அடுத்த படத்தில் நடிக்க நடிகை தர்ஷா கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ‘ருத்ர தாண்டவம்’ என தலைப்பிடப்பட்ட இந்த படத்தில் கதாநாயகனாக திரௌபதி பட நடிகர் ரிச்சர்ட் நடிக்கிறார் . இந்நிலையில் நடிகை தர்ஷா படப்பிடிப்பு புகைப்படம் ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் . அதில் ‘ருத்ரதாண்டவம் ஆரம்பம்’ என பதிவிட்டு திருமணமாகி நிறைமாத கர்ப்பிணியாக இருப்பது போன்ற புகைப்படத்தை அவர் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது .