குக் வித் கோமாளி GRAND FINALE எப்போது ஒளிபரப்பாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியின் முதலாவது சீசன் வெற்றிகரமாக நடந்து முடிந்த நிலையில் தற்போது இரண்டாவது சீசன் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
அதன்படி இறுதி சுற்றிற்கு கனி, அஸ்வின், பவித்ரா, ஷகிலா, பாபா பாஸ்கர் ஆகியோர் தேர்வாகியுள்ளனர். இந்நிலையில் குக் வித் கோமாளி சீசன்2 நிகழ்ச்சியின் டைட்டிலை யார் தட்டிச் செல்ல போகிறார் என்பதைக் காண்பதற்கு ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சி வார இறுதியில் சனி மற்றும் ஞாயிறு மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகும். ஆனால் தற்போது இறுதிச்சுற்று 5 மணி நேரம் ஒளிபரப்பாக உள்ளது. ஆகையால் இந்த வாரம் இறுதியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி ஒளிபரப்பாகாது. அதற்கு பதில் வரும் தமிழ் புத்தாண்டான ஏப்ரல் 14ஆம் தேதி மதியம் 2 மணி முதல் மாலை 7 மணிவரை இறுதிச்சுற்று ஒளிபரப்பாகும் என்று தெரியவந்துள்ளது.