நடிகர் சிம்புவும் குக் வித் கோமாளி பிரபலம் அஸ்வினும் ஒன்றாக சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருப்பவர் நடிகர் சிம்பு. இவரது நடிப்பில் தற்போது மாநாடு திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதேபோல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் அஷ்வின்.
இவர் தற்போது இந்நிகழ்ச்சியின் இறுதி சுற்றிற்கு தேர்வாகியுள்ளார். இந்நிலையில் முன்னணி நடிகர் சிம்புவும், குக் வித் கோமாளி பிரபலம் அஸ்வினும் ஒன்றாக சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளனர். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.