Categories
சினிமா தமிழ் சினிமா

முன்னணி நடிகருடன் குக் வித் கோமாளி பிரபலங்கள்…. வைரலாகும் புகைப்படம்….!!!

முன்னணி நடிகருடன் குக் வித் கோமாளி பிரபலங்கள் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி ரசிகர்களிடம் மாபெரும் வெற்றியை பெற்றது. இந்நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் கனி டைட்டில் வின்னர் ஆனார். இதை தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் எப்போதும் ஒளிபரப்பாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளிகளாக இருந்த புகழ்,பாலா, சிவாங்கி ஆகியோர் முன்னணி நடிகர் விஷால் மற்றும் நடிகை நிக்கி கல்ராணியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளனர். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.

Categories

Tech |