Categories
சினிமா தமிழ் சினிமா

நகைச்சுவையில் கலக்கும் “குக் வித் கோமாளி”…. இந்த வாரம் “Immunity-யை” வெல்வது யார்?

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் “குக் வித் கோமாளி” நிகழ்ச்சியில் இந்த வாரம் இம்யூனிட்டி பேண்டை வென்றவர் பற்றிய தகவல் கிடைத்துள்ளது.

பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வாரம் முழுவதும் தங்களது பணிச்சுமையை தாங்க முடியாமல் அசதியுடன் இருக்கும் பலரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பார்ப்பதன் மூலம் தங்களின் மன அழுத்தத்தை போக்கிக் கொள்வதாக தெரிவித்துள்ளனர்.

பலரது மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் இந்நிகழ்ச்சியில் அவ்வப்போது Elimination என்ற இக்கட்டான சூழ்நிலை ஏற்படும். ஆனால் இந்த Elimination-னில் இருந்து தப்பிப்பதற்காக இதற்கு முந்தைய வாரமே immunity ரவுண்ட் என்ற போட்டி நடைபெறும். அதில் வெற்றி பெறுபவர்கள் அடுத்த வாரம் நடைபெறும் Elimination ரவுண்டில் இருந்து தப்பித்துக் கொள்வார்.

மற்றவர்கள் போட்டியில் கலந்து கொள்வார்கள். அவர்களில் குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் Elimination செய்யப்படுவார்கள். அந்த வகையில் இந்த வாரம் immunity-யை  வென்றவரின் தகவல் கிடைத்துள்ளது. ஷகிலா-புகழ், கனி-மணிமேகலை, பாபா பாஸ்கர்-பாலா, அஸ்வின்-சிவாங்கி ஆகியோர் immunity ரவுண்டில் பங்கேற்று சமைத்தனர்.

முதல் ரவுண்டில் பாபா பாஸ்கர் மற்றும் அஸ்வின் நன்றாகச் சமைத்து இரண்டாம் ரவுண்டிற்குள் நுழைந்தனர். அந்த போட்டியில் சுவையாக சமைத்து immunity பேண்டை பாபா பாஸ்கர் வென்றார். இதனால் இவர் அடுத்த வாரம் நடைபெறும் Elimination ரவுண்டில் இருந்து தப்பித்துக் கொள்வார்.

Categories

Tech |