Categories
சினிமா தமிழ் சினிமா

ஏழைகளுக்கு உதவும்… குக் வித் கோமாளி பிரபலம்…!!

குக் வித் கோமாளி பிரபலம் தர்ஷா குப்தா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்து வருகிறார்.

தமிழ்நாட்டில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்காக தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் தற்போது எந்தவித தளர்வுகளும் இல்லாத முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காலகட்டத்தில் மக்கள் யாரும் உணவில்லாமல் தவிக்கக் கூடாது என்பதற்காக பலரும் உதவிக்கரம் நீட்டி வருகின்றன.

அந்தவகையில் முள்ளும் மலரும் சீரியல் மற்றும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் புகழ் பெற்ற நடிகை தர்ஷா குப்தா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்து வருகிறார். இதுகுறித்து அவரது டுவிட்டரில் சென்னை ராயபுரம் பகுதியில் உள்ள வருமானம் இன்றி தவிக்கும் மீனவ குடும்பத்தினருக்கு தன்னால் இயன்ற உதவி செய்தேன். நீங்களும் இல்லாதவர்களுக்கு உதவுங்கள். உங்கள் சந்ததி வாழும் என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |